சென்னை: சென்னையின் இதயப்பகுதி எது என்று கேட்டால் கண்டிப்பாக அண்ணாசாலையை சொல்லலாம். ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர் தாம்பரம் தான் சென்னையின் இதயப்பகுதியாக இருக்க போகிறது.இது ஒருபுறம் எனில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நிற்காமல் சென்றவரை காலியாகவே சென்றது. ஆனால் தாம்பரத்தில் நின்று சென்ற பின்னர் ஹவுஸ்புல்லாக செல்கிறது. சென்னையில் 2000களில் தாம்பரம் நகரம் , இப்போது செங்கல்பட்டு உள்ளது போல் புறநகர் பகுதியாக இருந்தது. சென்னை என்பது அங்கிருந்து குறைந்தது 15 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் தான் அடைய முடியும். அதாவது கிண்டி தான் சென்னை என்பதாக இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல.. சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக தாம்பரம் மாறிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tambaram-is-going-to-be-the-heart-of-chennai-after-kilambakkam-bus-station-526373.html