உணவு தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறை தற்போது மாண்புமிகு தமிழக சுகாதார துறை அமைச்சர் அவர்களால் கடந்த 03.05.2023 அன்று புகார் நடவடிக்கைகள் எளிதாக்கும் விதமாக இணைய தளம் மூலமாகவும் , கைபேசி செயலி மூலமாகவும் புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடனும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டு Android மற்றும் iOS ஆகிய கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்யும் விதமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, எனவே இனிவரும் காலங்களில் உங்கள் புகார்களை foodsafety.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவும் , Tn food safety Consumer App என்ற கைபேசி செயலி மூலமாகவும் பின்வரும் இணைப்புகளை கொண்டு பதிவிறக்கம் செய்துபயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடுகிறது. புகாரதாரரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
android கைபேசி- https://play.google.com/store/apps/details?id=com.fsopublicapp
iOS கைபேசி- https://apps.apple.com/in/app/tn-food-safety-consumer-app/id1565948095

For raising your complaints related to food, introduced Now food safety department