Jeyamohan

Nov 26, 2023
  • by jeyamohan
    மதுரை புத்தகக் கண்காட்சி 6 செப்டெம்பர் 2024 முதல் தமுக்கம் மைதானத்தில் நிகழ்கிறது. அதில் விஷ்ணுபுரம் கடை எண் – 47 நான் இன்று (9 செப்டெம்பர் 2024) மாலை 5 மணிமுதல் புத்தகக்கண்காட்சி அரங்கில் இருப்பேன். வாசகர்கள் விரும்பினால் சந்திக்கலாம். அண்மையில் வெளிவந்த உடையாள், பின்தொடரும் பிரம்மம் போன்ற நூல்களும், மறுபதிப்பாக வந்துள்ள விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, ஏழாம் உலகம், காடு போன்ற நாவல்களும்  உட்பட என் நூல்கள் பெரும்பாலானவை கிடைக்கும். விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் […]
  • by jeyamohan
    அன்புள்ள ஜெயமோகன் நான் அண்மையில் உங்களுடைய புக்பிரம்மா உரையாடலைக் கேட்டேன். உண்மையைச் சொன்னால் நான் உங்களை கேள்விப்பட்டிருந்தாலும் எதுவும் படித்ததில்லை. எனக்கு இலக்கிய ஆர்வம் இருந்த காலம் இப்போது பின்னகர்ந்துவிட்டது. அதிகமாக நான் வாசிப்பவை ஆங்கிலத்தில் குறிப்பாக அரசியல் நூல்களும், சமூகவியல்நூல்களும்தான். புக்பிரம்மா உரையில் நீங்கள் ஐந்தே நிமிடத்தில் தமிழின் புதிய இலக்கியப்போக்குகளைச் சுருக்கிச் சொன்னது சிறப்பாக இருந்தது. புக்பிரம்மா இறுதிநாள் விழாவில் உங்கள் உரையாடலும் மிகச்சிறப்பாக இருந்தது. துணிச்சலாகக் கருத்துக்களைச் சொன்னீர்கள். அப்படிச் சொல்வதற்கான தகுதி […]
  • by jeyamohan
    கே.ஜே.அசோக்குமார் நாவல்களும் சிறுகதைகளும் எழுதி வருகிறார். ரமணிகுளம் நாவல் இவருடைய சிறந்த படைப்பாக மதிப்பிடப்படுகிறது.
  • by jeyamohan
    விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு அன்புள்ள ஜெ இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி. எல்லா வகையிலும் தகுதியான விருது அது. அவருடைய நாவல்கள் ஓரளவுக்குப் பேசப்பட்டிருக்கின்றன. அவருடைய சிறுகதைகள் பரவலாக வாசிக்கப்பட்டதே இல்லை. அதற்குக் காரணம் அவை பெரும்பாலும் உயர்நிலை கார்ப்பரேட் உலகிலே நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதுதான். கதையை ஒரு கதைசொல்லி வேகமாக, அங்கே இங்கே தொட்டுத்தொட்டுச் சொல்லிப்போகும் விதமாக அவர் எழுதியிருப்பார். உயர்நிலை கார்ப்பரேட் வியாபாரத்தில் இருக்கும் ஏமாற்றுத்தனங்களும், சிறுமைகளும் வந்துகொண்டே இருக்கும். […]
  • by jeyamohan
    அன்புள்ள ஜெ உங்கள் இரண்டு நாவல்களை என் பிள்ளைகளுக்காக வாங்கினேன். வெள்ளி நிலம், பனிமனிதன். என் பிள்ளைகள் இரண்டுபேருமே இன்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை எதையாவது வாசிக்க வைப்பது என்பது இன்று மிக முக்கியமான ஒரு தேவையாக உள்ளது. இன்றைய பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் இழந்துவருகிறார்கள். எழுத்துக்களைப் பார்க்கும் வழக்கமே குறைகிறது. எழுத்தைப் பார்த்தாலே எரிச்சல் கொள்கிறார்கள். நான் ஆரம்பத்திலேயே கொஞ்சம் கவனமாகவே இருந்தேன். பிள்ளைகளுக்கு செல்போன் எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் பள்ளி நம் கட்டுப்பாட்டில் இல்லை. […]