நமஸ்காரம் நமது ரெசிடென்ஸி வைத்யநாதசுவாமி ஆலயத்தில் இன்று 1.5.2024 புதன்கிழமை குருபெயர்ச்சி நடைபெற உள்ளது.. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் அதனை முன்னிட்டு மாலை 3:30 மணி முதல் குரு பகவானுக்கு விசேஷ ஹோமம் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு மகாபிஷேகம் தொடர்ந்து நவகிரக மற்றும் குரு பகவானுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து சகஸ்ரநாமம் மகா தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானின் அருளை பெற வேண்டுகிறோம்

Posted in devotee’s interest