Jeyamohan

Nov 26, 2023
  • by jeyamohan
      THE ABYSS வாங்க ALTA விருது அறிவிப்பு ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சுசித்ரா ராமச்சந்திரன் செய்திருந்தார். சென்ற ஆண்டு அந்நூல் ஜக்கர்நாட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகச்சிறந்த மதிப்புரைகள் பெற்று முதன்மையான விற்பனையில் உள்ளது. அந்நூல் அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பு விருது ( ALTA- American )க்கு இறுதிப்பட்டியலில் ஆறுநூல்களில்  ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து ஒரு நூல் அந்த விருதுக்கான பரிசீலனைக்குச் செல்வதே ஓர் அரிய நிகழ்வு. தமிழில் இருந்து செல்வது மேலும் […]
  • by jeyamohan
    தி.வ. தெய்வசிகாமணி, ‘கவிதை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். தலையங்கம், நேர்காணல் என அனைத்துமே கவிதை வடிவில் வெளியாகின. தெசிணி என்னும் பெயரிலும் எழுதினார்
  • by jeyamohan
    விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு அன்புள்ள  ஜெ வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விருது இரா. முருகனுக்கு அறிவித்துள்ளீர்கள். தகுதியானவருக்கு தகுதியான விருது. புனைவில் யதார்த்தம் என்பது ஆசிரியரும் வாசகரும் சந்திக்கும் புள்ளி எனில் அந்த யதார்த்தத்தை உடைத்து அப்புள்ளியை வேறு வகையில் ஏன் நிகழ்த்த கூடாது என்ற சிந்தனையின் வழி வருபவை அவரது நாவல்கள். வரலாற்றில் நிகழாத, ஆனால் நிகழ சாத்தியம் கொண்ட நிகழ்வுகளை அங்கத நடையில் புனைவுகளாக்கும் படைப்புகள் அவை. அவருக்கு வாழ்த்துகள். அன்புடன் கலைச்செல்வி […]
  • by jeyamohan
    ஐயா, வணக்கம். தங்களின் ஊக்கத்தினால் என்னுடைய அடுத்த பரிமாணமான மின்னூல் வெளியிடும் முயற்சியில் தங்களைச் சந்தித்ததற்குப் பிறகு பதினொரு நூல்களைப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். முன்னர் கிடைக்காத நூல்களை இம்மின்னூல்களாகப் பதிவேற்றம் செய்திருக்கின்றேன். தங்களின் வாசகர்கள் இந்நூல்களைப் பயன்படுத்திக் கொள்ள வகை செய்திடக் கேட்டுக் கொள்கிறேன். இப்பதினொன்றில் கோவைத் தூறல் சிறுகதைத் தொகுப்பாகவும், செம்புலப்பெயர் நீர் ஐக்கூக் கவிதைத் தொகுப்பாகவும், அக்னிப்பூ என்பது கதைக்கவிதையாகவும், பூட்டாதிருக்கும் வாசல் என்பது கதைக்கவிதையாகவும், இதழ்ப் பதிப்பு நூல்களில் 21 சுவடிப் பதிப்பு […]
  • by jeyamohan
    இந்த கடிதம் தினமும் ஒரு மணி நேரம் செலவழித்து 15 நாட்கள் எழுதியது. எந்த ஒரு செயலையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நீண்ட நாட்கள் செய்து அந்த செயலில் மூழ்கி நம் ஆற்றலை பெருக்கி அதில் சந்தோசத்தை காண்பது தங்களது வழி. அவ்வழியில் நானும் நடந்து இந்த கடிதத்தை எழுதினேன்.  இது தங்கள் தளத்தில் வெளிவர வேண்டும் என்ற ஆசையில் எழுதப்பட்டது அல்ல. நன்றியின் கணக்கு. ஆம் தங்களுக்கு என்னுடைய நன்றியை சமர்ப்பிக்கும் விதமாக எழுதப்பட்ட கடிதம். தாங்கள் இந்த கடிதத்தை முழுமையாக படித்தால், என்னுடைய முதல் நன்றி கணக்கு […]